* உடல், மனம், நாக்கு மூன்றையும் அடக்கியவனே அடக்கம் மிக்கவன். * கோபத்தை அன்பால் வெல்லுங்கள். பகைவரிடமும் நட்புக்கரம் நீட்டுங்கள். * சேற்றில் விழுந்த யானை போல மனம் தீமையில் விழுந்து விட்டாலும், அதை துாக்கி நிறுத்தி மீட்க முயலுங்கள். * சந்தனம் கூட குறிப்பிட்ட துாரம் வரையே மணக்கும். ஆனால், நல்லவன் புகழ் நாலா திசைகளிலும் பரவும். * அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும். இதை மீறுபவன் தன்னை இழக்கத் துணிந்து விட்டதாகப் பொருள். * தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன். -புத்தர்