* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு உங்களால் இயன்ற சேவை செய்யவும் தயாராக இருங்கள்.
* மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. நல்ல எண்ணத்தை மட்டுமே மனதிற்குள் நுழைய அனுமதியுங்கள்.
* தியானத்தின் மூலம் சிந்தனை ஒருமுகப்படுகிறது. பிரார்த்தனை செய்வதும் ஒருவகை தியானமே.
* உங்களிடம் இருக்கும் செல்வத்தை நீங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
* கோபத்தினால் கடுகளவு கூட நன்மை கிடைப்பதில்லை. எந்தச் சூழலிலும் சாந்தமுடன் இருக்கப் பழகுங்கள்.
-மகாவீரர்