* நல்லவர்கள் தீயவனைக் கண்டால் வழி விட்டு ஒதுங்குவது பயத்தினால் அல்ல. மானம் காக்கவே.
* உணவால் உடல் நலம் பெறுவது போல, பக்தியால் உள்ளம் நலம் அடைகிறது.
* பிரார்த்தனை செய்தால் உடம்பெங்கும் அருள் என்னும் மின்சாரம் பரவத் தொடங்கும்.
* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்தது.
* பெற்றோர் ஒழுக்கத்தைப் பேணி வாழ்ந்தால், பிள்ளைகளும் அதனைப் பின்பற்றி வாழ்வர்.
* எந்த செயலில் ஈடுபட்டாலும் சுயநலம் கொள்ளாமல் பிறரின் நலனுக்காகச் செய்யுங்கள்.
-வாரியார்