* ஒரு பிரச்னையில் முதலில் இரு தரப்பினையும் பொறுமையாக விசாரி. தீர யோசித்த பின் நியாயத்தைச் சொல்.
* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்குரியவரே நல்ல உறவினர்.
* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன்.
* விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.
* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.
-புத்தர்