* ஒழுக்கமே உயர்வுக்கான ஒரே வழி. உலகெங்கும் ஒழுக்கம் நிலைத்து விட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.* ஆயிரம் நுால்களைப் படிப்பதை விட ஒரு நல்ல நுாலின் கருத்தை வாழ்வில் பின்பற்றுவது மேலானது.* ஒழுக்கமற்ற அறிவாளியை விட, ...
* பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.* இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.* நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.* ஆண், பெண் என்னும் இரண்டைத் தவிர உலகில் வேறெந்த ஜாதியும் கிடையாது.* கோபமே மனிதனுக்கு ...
* பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும்.* அன்பு, ஒழுக்கம், கருணை ஆகிய நற்பண்புகளில் நம்பிக்கை வையுங்கள். கடவுள் மீது துாய பக்தி செலுத்துங்கள்.* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை விட்டு நம்மால் ஒரு கணநேரம் கூட பிரிந்திருக்க ...
* மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.* பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.* பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரியக் ...
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த மனிதன்.* உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் உயர்வாகவே கருது.* தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைய நேரிடும்.* காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டு கூட கசக்கும். அது போல ...
* பிறந்த மண்ணை நேசியுங்கள். நாட்டிற்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருங்கள்.* வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகி விட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்.* தர்மபலமே நிஜபலம். சத்திய பலமே சரீர பலம் என்று சொல்வார்கள். தர்மத்தையும், சத்தியத்தையும் வாழ்வில் பின்பற்றுங்கள்.* உணவிலும், ...
* உணவைத் தேடுவது மட்டும் வாழ்க்கையல்ல. பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடும் கடமை நமக்கு இருக்கிறது.* கடவுள் நடத்தும் நாடகத்தில் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம்.* தாயே குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாள். அதுபோல வேதம் என்னும் தாய், நமக்கு ...
* தேன் என்று சொன்னால் மட்டும் இனித்து விடாது. அது போல சேவை என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும்.* மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மந்திரச் சொல். இதை மதித்து நடந்தால் மகாதேவனே மகிழ்ந்து அருள்புரிவான்.* தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்குச் ...
* அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு முதல் போடுகிறோமோ அதற்கேற்ப லாபமும் அதில் அதிகமாக கிடைக்கும்.* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.* அறிவும் மானமும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே தான் இருக்கும்.* தர்மம் ...
* உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும்.* ஆயிரம் அறிவுரைகளை சொல்வதை விட, ஒரு செயலைச் செய்வது மேலாகும்.* தான் பெற்ற அறிவு, ஆற்றல், செல்வம் அனைத்தையும் சமுதாயத்திற்குச் செலவழிப்பவன் போற்றத்தக்கவன்.* உடல் நோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மன நோய்க்கு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.