* ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.* பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.* வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்லுங்கள். மனம் ஒன்றி பக்தியில் ஈடுபடுங்கள்.* அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் துாங்கச் ...
* கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.* நல்ல பழக்கங்களின் மூலம் மனதில் எழும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தவோ அகற்றவோ முடியும்.* மனதுடன் போர் நடத்தாதீர்கள். தியானத்தால் ஒருநிலைப்படுத்துங்கள். இதுவே மகிழ்ச்சிக்கான வழி.* பால், பழம் போன்ற ...
* உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும் மனதை அடக்குவது கடினம். அதற்கு விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம்.* மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும்.* அடிமையாக கிடப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.* நாய் தன் எஜமானனைத் தொடர்வது ...
*நேர்மை ஒன்றே உலகத்தின் ஆதாரம். எண்ணத்திலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.* மனச்சோர்வு இல்லாமல் துன்பத்தை பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவனே மன உறுதி மிக்கவன் ஆவான்.* வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.* தேவையைக் குறைத்துக் கொண்டால் ...
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள்.* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுங்கள். நேர்மையான வழியில் உழைத்துப் பொருள் தேடுங்கள்.* உண்ணும் முன் ஒருநிமிடம் கடவுளைப் பிரார்த்தனை செய்வதன் மூலம் உணவு புனிதம் அடைகிறது.* வாரம் ஒருமுறை விரதம் ...
* எளிய வாழ்வும், உயர்ந்த எண்ணமுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.* யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.* வேலைக்காரர்களை நம்பி இருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யப் பழகுங்கள்.* தேவைகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும்.* ...
* பிறர் மீது பகையோ, பொறாமையோ கொள்ள முயலாதீர்கள். பொறுமையை எந்த நிலையிலும் இழக்காதீர்கள்.* உடல் ஆரோக்கியமும், பொருளாதார பாதுகாப்புமே மனிதனை நிம்மதியாக வாழ்வதற்கு துணைபுரிகின்றன. * பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவது அமைதிக்கு வழிவகுக்கும்.* பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். ...
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்காவது தர்மம் செய்ய வேண்டும். எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள்.* அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள்.* சத்தான எளிய உணவை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாதீர்கள்.* எந்த நிலையிலும் ...
* சுயநலம் சிறிதும் வேண்டாம். உலகமே உங்கள் குடும்பம் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் தர்மம் செய்யுங்கள்.* ஆணவம் இல்லாமலும், எதையும் எதிர் பாராமலும் பிறருக்கு நன்மை செய்வது ஒன்றே உண்மையான ஆன்மிகம்.* சகிப்புத்தன்மையுடன் அனைவரிடமும் பழகுங்கள். சந்தர்ப்ப சூழலுக்கேற்ப ஒத்துப்போக முயலுங்கள்.* ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.