* எதிர்ப்பும், பகையும் கூட மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றால் தான் மனம் உறுதி பெறுகிறது.* நேர்மையாக இருப்பதே மகிழ்ச்சி தரும். ஒவ்வொரு நேர்மையான செயலும் உங்களுக்கு வெகுமதி தர காத்திருக்கிறது.* கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே ...
* பக்தி என்பது எதையும் தனதாக்கிக் கொள்வது அல்ல. தன்னையே உலகிற்கு பொதுநலத்துடன் அர்ப்பணிப்பதாகும்.* ஒருபோதும் தற்புகழ்ச்சி கொள்ள வேண்டாம். அதனால் மனதின் பேராற்றல் சிறிது சிறிதாக வீணாகி விடும்.* கோபம் எப்போதுமே முட்டாள் தனமானவற்றை மட்டுமே சிந்திக்கவும், பேசவும் வைக்கும்.* தவறை உணர்ந்து ...
* உழைப்பின் மீது நம்பிக்கை கொள். வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும்.* உலகத்தை ரசிக்கக் கற்றுக் கொள். எரிச்சல் தரும் விஷயத்தையும் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.* உள்ளம் ஒளியுடையதாக ...
* எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் கலங்காதே. லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டேயிரு.* முயற்சி ஒன்றே மகிழ்ச்சிக்கான வழி. முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் எந்த இன்பத்தையும் காண முடியாது.* உலகில் மோசமான வேலை என்று எதுவுமே இல்லை. வேலை செய்பவர்களில் தான் மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள்.* அன்றாட ...
* எப்போதும் அமைதியாக இருங்கள். பேசாமல் இருந்தால் பிரச்னை வராது.*கடவுள் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். அவர் மீது பக்தி செலுத்துவதே உண்மையான மகிழ்ச்சி.* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை. அது உங்கள் சுயவிருப்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. * பிறருக்கு புத்திமதி கூறும் முன் ...
* எப்போதும் திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள். எந்த விஷயத்திலும் நல்லதை மட்டும் காண முயற்சி செய். எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.*காலத்தை வீணாக்குவது கூடாது. பிறகு ஒரு நாள் பார்க்கலாம் என்று எதையும் தள்ளிப் போடாதே. உடனடியாக பணியில் முழு மூச்சுடன் ஈடுபடு.* மற்றவருக்கு புத்திமதியை ...
* குறிக்கோள் இல்லாத வாழ்வு பரிதாபமானது. மனிதன் பயனுள்ள குறிக்கோளுக்காக வாழ வேண்டும்.* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.* தியானத்தை அன்றாட கடமையாக ஏற்றுக் கொள். தெய்வீக சக்தியை அதன் மூலம் அடைய முடியும்.* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறந்து விடுவது ...
* பயனின்றி பேசும் ஒவ்வொரு சொல்லும் கூட உனக்கு ஆபத்து உண்டாக்கும்.* தடை குறுக்கிட்டாலும், மன உறுதியுடன் லட்சியத்தை நோக்கி முன்னேறு.* எரிச்சல் தரும் விஷயத்தைக் கூட, உனக்கு கிடைத்த பாடமாகக் கருது. புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்.* நேர்மையாக வாழ்வதில் மகிழ்ச்சி கொண்டிரு. ஒவ்வொரு நேர்மையான செயலிலும் ...
* உங்களின் விருப்பம் நேர்மையானதாக இருந்தால், கடவுள் அதை நிச்சயம் ஒருநாள் நிறைவேற்றுவார்.* கோரிக்கை இல்லாத வழிபாடே உண்மையான வழிபாடு. அதுவே முழுமையானதுமாகும்.* கடவுளின் திருவுள்ளப்படி எல்லாம் நடக்கட்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.* நீங்கள் சிந்திக்காவிட்டாலும், கடவுள் எப்போதும் ...
* பூக்களை நேசியுங்கள். பூக்களுடன் மனம் தொடர்பு கொண்டால் எப்போதும் நிறைவுடன் வாழலாம்.* உழைப்பால் அனைத்தும் கைகூடும். நம்பிக்கையுடன் உழைப்பவர்கள் வெற்றியை எளிதில் அடைவர்.* மனதில் தன்னம்பிக்கை நிலைத்திருந்தால் தயக்கமோ, அச்சமோ கொள்ளத் தேவையிருக்காது.* வெற்றியைக் கண்டு மகிழாதீர்கள். தோல்வியைக் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.