தாயும் தெய்வமும்
ஜூன் 30,2016

* தெய்வத்தை தாயாக கருதுவதே அம்பிகை வழிபாடு. அவளிடம் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.* நடந்ததை நடந்தபடி சொல்வது சத்தியமாகாது.* பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு ...

 • மதிப்புடன் வாழுங்கள்

  ஜூன் 21,2016

  * எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் நாம் விடாமுயற்சியால் மீண்டும் அவருடன் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட வேண்டும்.* மனித மனம் எதை தீவிரமாக சிந்தித்தாலும் அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.* வாழ்க்கையை லாப ...

  மேலும்

 • நல்லவர்களிடம் அன்பு காட்டு

  ஜூன் 21,2016

  * பள்ளியில் சேர்க்கும் முன் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது பெற்றோரின் கடமை.* நல்லவர்களிடம் அன்பு காட்டுவது சிறப்பானது. பாவிகளின் மீது அன்பு செலுத்துவது அதை விட சிறப்பானது.* அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.* தேவைகள் அதிகரித்துக் கொண்டே ...

  மேலும்

 • கடவுளின் கருணை

  ஜூன் 12,2016

  * அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.* கடவுள் உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார்.* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.* ...

  மேலும்

 • மாறாத அன்பே நட்பு

  ஜூன் 02,2016

  * ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.* நிறைவேறாத ஆசைகளே மனதில் காமம், கோபம் ஆகிய தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.* திருநீறும், திருமண்ணும் உலகத்தின் ...

  மேலும்

 • கைப்பிடி அரிசி தானம்

  மே 25,2016

  * பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.* இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.* அக்கம்பக்கத்தினரோடு ...

  மேலும்

 • பேச்சைக் குறையுங்கள்

  மே 20,2016

  * அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.* கணவர் சம்பாதிக்கும் பணத்திற்குள் கட்டு செட்டாக பெண்கள் குடும்பம் நடத்துவது நல்லது.* எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.* பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை ...

  மேலும்

 • தியாகம் செய்வது உயர்ந்த குணம்

  மே 11,2016

  * அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.* நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.* தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.* தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ...

  மேலும்

 • பெற்றோரின் கடமை

  மே 04,2016

  * ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.* பெரும்பாலும் மனிதர்கள் ஆசை என்னும் பெயரால் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.* கோபத்தால் பிறருக்கு ...

  மேலும்

 • உயிர்களை நேசியுங்கள்

  மே 02,2016

  * உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.* பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.* வாழ்வில் எளிமையைக் கடைபிடித்தால் பணத்தேவை குறையும். அப்போது பிறருக்கும் உதவி செய்து வாழ முடியும்.* பேச்சில் ...

  மேலும்

1 - 10 of 36 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X