மாமன்னர் அசோகர் புத்த மதத்துக்கு மாறிய நாள், புத்த மதத்தினரால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்திலுள்ள புத்த மதத்தினர் இதை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளை 'அசோக விஜயதசமி' என்று அழைப்பர். அசோகரின் காலம், கி.மு. 274 முதல் கி.மு. 232 வரை ஆகும். தீபாவளியன்று புத்த மடாலயங்களில் புத்தருக்கு விசேஷ ஆராதனைகள் நடத்துவர்.