வெளியே புறப்படும் போது, 'ஜாக்கிரதையாகப் போய் வா' என பெற்றவர்கள், பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்கிறார்கள். ஆன்மிக வாழ்விலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஜாக்கிரதையான விஷயங்கள் பற்றி பைபிளில் இருந்து மேற்கோள் காட்டப்படுகிறது.
1. உன் ஆத்துமாவை ஜாக்கிரதையாய் காத்துக்கொள்.
2. கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ள ஜாக்கிரதையாய் இரு. (நீங்கள் நினைப்பதை செயல்படுத்த முயற்சிக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).
3. தேவனுடைய ஆலயத்திற்கு தேவனுடைய கற்பனையின் படியே தேவையான எல்லாம் ஜாக்கிரதையாய் செலுத்தப்பட வேண்டும். (ஆலயத்துக்கு கொடுக்க வேண்டியதை தவறாமல் கொடுத்து விட வேண்டும்).
4. ஜாக்கிரதை உள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்.
5. ஜாக்கிரதை உள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
6. ஜாக்கிரதை உள்ளவனுடைய நினைவுகள் செல்வத்தை அடைய ஏதுவாகும்.
7. தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
இதில் வசனம் 4 முதல் 7 வரை உள்ளவை எதிலும் கவனமாக இருப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை சுட்டிக்காட்டுகிறது. எதிலும் கவனமாக இருந்து, உரிய நன்மைகளை நீங்களும் அடையுங்கள்.