கங்கா ஸ்நானத்தால் பாவம் தொலைந்து விடுமா?
அக்டோபர் 29,2010,16:17  IST

தீபாவளியை ஒட்டி புனித நதியான  கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவம் தீர்ந்து விடும் என்கிறோம். ஆனால், புனிதநதிகளின் ஸ்நானம் மட்டுமல்ல! மற்றொன்றையும் கடைபிடித்தால் தான் பாவம் தீரும் என்கிறார் புத்தர்  பெருமான். அவரது பொன்மொழிகளைக் கேட்போமா!
* அறவழியில் செல்கின்ற மனமே உண்மையான மனமாகும். ஆனால், மனித மனமோ சபலம் கொண்டது. பலவீனத்துடன் நம்மை படு
குழியில் தள்ளிவிடப் பார்க்கும். நிலையற்ற போலி இன்பங்களை ஒதுக்கிவிட்டு, நிலையான இன்பத்தை தேடுங்கள்.
* நோயும், மூப்பும், மரணமும் கொண்டது வாழ்க்கை. நாம் என்று இவற்றின் தன்மைகளை என்று உணர்கிறோமோ அன்றே வாழ்வின் உண்மையை உணர்ந்தவராவோம்.
* தன் கடமையைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இருப்பவனுக்கு விடுதலை நிச்சயம் கிடைக்கும். மனதில் இருக்கும் மாசு அனைத்தையும் விலக்கி விட்டால், நம்மிடமிருக்கும் அகந்தை அறவே விலகி விடும்.
* கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது, கரையோரம் ஒதுக்கி விடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கி விட வேண்டும்.
* குறிக்கோளுடன் வாழுங்கள். மனத்தூய்மையுடன் செயல்படுங்கள். சத்தியத்திலிருந்து ஒருபோதும் விலகாதீர்கள். அப்போது உங்களை தடுக்கும் அத்தனை விலங்குகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களுடைய சுதந்திரத்திற்கு நீங்கள் தான் அக்கறையுடன் பாடுபட்டாக வேண்டும்.
* உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் இருக்கும் நல்ல, தீய குணங்களை அறிந்து கொள்ள முடியும். இப்பரிசோதனையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் செயற்கரிய செயலையும் செய்வதற்கான மனவலிமை உண்டாகும்.
* காலம் காலமாய் சொல்லப்பட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை அப்படியே நாம் ஏற்றுக் கொள்வது கூடாது. புனித நதிகளில் நீராடுவதால் பாவங்கள் தொலையும் என்கிறார்கள். நல்ல எண்ணங்கள் யாரிவம் உள்ளதோ அவரே பாவங்களைத் தொலைத்தவர் ஆவார். தீயதை விட்டு நல்லதை நாடும் நாளே பாவங்கள் தீரும் பொன்னாள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X