உள்ளத்தை மட்டும் பாருங்கள்! உலகமே உங்களை பார்க்கும்!
ஜூலை 27,2018,14:37  IST

ஆக.3 - நினைவு தினம்

* உன் உள்ளத்தைக் கட்டுப்படுத்து. வெற்றிக்கான கதவு திறக்கும். உலகமே உன்னை பாராட்டும்.
* அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் மனம் துாய்மையாகும். மாறாத அன்பினால் நாம் உலகையே வெற்றி கொள்ள முடியும்.
* தளர்ச்சி, சோர்வை நீக்கி, தடைபட்ட செயல்களை துரிதப்படுத்தும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே உண்டு.
* மனிதன் முழுமையான வளர்ச்சியடைய உதவுவது தியானம். இதனை தினமும் கடைபிடிப்பது நல்லது.
* தானியம், பழங்கள், காய்கறிகளை வழங்கி நம்மை வாழச் செய்யும் பூமித்தாயான மண்ணும், நீரும் நம் வழிபாட்டுக்கு உரியவை.
* கடவுளைப் பற்றி விளக்குவது என்பது முடியாதது.
* மனமாகிய வீட்டில் இருந்து கடவுள் நம்மை இயக்குகிறார். அவர் நம் கண்ணுக்குத் தெரிய மாட்டார். ஆனால், அவர் அருளால் தான் நம் வாழ்க்கை நடக்கிறது.
* வாழ்வின் ஒரே உயர்ந்த குறிக்கோளான பக்தியில் முழுமூச்சாக ஈடுபடுங்கள்.
* மனிதனின் கவுரவம் என்பது புத்தியை ஒழுங்காகப் பயன்படுத்தி வாழ்வதில் தான் இருக்கிறது.
* அந்தரங்க விஷயங்களை ஒருவர் கையாளும் விதத்தைப் பொறுத்தே, அவரது வாழ்க்கையில் வெற்றியும், சந்தோஷமும் நிர்ணயிக்கப்படுகிறது.
* அறிவு, உணர்ச்சி, குணம் இவற்றால் நாம் வேறுபடுவதால் தான் சமுதாயத்தில் பிரிவுகள், பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன.
* நாம் யார், எதற்காக பூமிக்கு வந்தோம் என்பதை அறியும் போது நம் மனக் குழப்பம், குறைபாடு, ஏக்கம் அனைத்தும் தீர்ந்து தெய்வீகநிலைக்கு உயர்கிறோம்.
* உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, துணிவைப் பாராட்டிக் கடவுள் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* பிறரின் மகிழ்ச்சியில் வெளிப்படையான இன்பமும், பிறருடைய துன்பத்தில் உண்மையாக பங்கும் கொள்ள வேண்டும்.
* சுயநலமின்றி உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அரவணைக்க முயலுங்கள். நீங்களும் உயர்ந்தவர்களாகி விடுவீர்கள்.
* உடலுக்குள் உள்ள உறுப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவற்றின் இயக்கத்தை உணர்கிறோம். இருதயம் ரத்தத்தை ஓட வைக்கிறது. குடல் உணவை ஜீரணம் செய்கிறது. இதைப் போல இறைவனும் நம்முள் இருந்து நம்மை இயக்குகிறான்.
* உடல் துன்பத்தை பெரிதுபடுத்தாதீர்கள். வாழ்வில் உயர விரும்பினால் இதை நாம் பின்பற்றுவது அவசியம்.
* தத்துவத்தை அடிப்படையாக கொண்டது வேதம். இதை எளிமையாக பாமரனுக்கும் புரியும் விதத்தில் அமைந்தவை புராணங்கள்.
* கடவுள் மனித புத்திக்கு எட்டாதவர். பெரிய ஆஸ்திகனாக இருந்தாலும் அவர் அகப்படமாட்டார்.

சீர்படுத்துகிறார் சின்மயானந்தர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X