வேண்டுதல் நிறைவேற வேளச்சேரிக்கு வாங்க!
ஆகஸ்ட் 26,2018,07:39  IST

மும்மூர்த்திகளின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் வழிபாட்டுக்காக 1966ல் மைசூரில் 'அவதுாத தத்தபீடம்' அமைப்பை கணபதி சச்சிதானந்த சுவாமிகள் நிறுவினார். இதன் சார்பாக சென்னை வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் உள்ள பேபி நகரில், 1989ல் ஆதிகுரு தத்தாத்ரேயர் கோயில் கட்டப்பட்டது. பின் காரியசித்தி ஆஞ்சநேயர், ராஜராஜேஸ்வரி, நவக்கிரக சன்னதிகள் உருவாயின. 2015, 16ல் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் பழுதுபட்டது. சுவாமிகளின் விருப்பப்படி திருப்பணி செய்யப் பட்டு 2018 மார்ச்4ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அழகான மண்டபத்துடன் கூடிய கோயில் நுழைவு வாயிலில் கம்பீரமாக இருயானை சிலைகள் பக்தர்களை வரவேற்கின்றன. கருவறையில் ஆதிகுரு தத்தாத்ரேயர், அனகா தேவியுடன் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி, தன்வந்திரி, சர்வேஸ்வரன், விஸ்வேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியருக்கு சன்னதிகள் உள்ளன. காரியசித்தி ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், நாத ஆஞ்சநேயர், அபய ஆஞ்சநேயர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக மட்டை தேங்காய் கட்டும் வழக்கம் உள்ளது. ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரியின் போது அலங்காரம் செய்யப்படும். தத்தாத்ரேயருக்கு மார்கழியில் தனுர்மாத பூஜையும், தத்தாத்ரேயர் ஜெயந்தி நடக்கும். விஸ்வேஸ்வரருக்கு மாதசிவராத்திரி, பிரதோஷ காலத்தில் அபிஷேகமும், முருகனுக்கு கார்த்திகை, விசாக நட்சத்திர நாட்களில் திருப்புகழ் பஜனையும் நடக்கிறது.
அவதுாத தத்தபீடத்தின் இளைய பீடாதிபதி விஜயானந்த தீர்த்த சுவாமிகள் 15வது சாதுர்மாஸ்ய விரதத்தை இந்தக் கோயிலில் மேற்கொண்டு வருகிறார். ஜூலை 27ல் தொடங்கிய விரதம் செப்.25ல் நிறைவு பெறுகிறது. இந்நாட்களில் காலை, மாலையில் சோடச லட்ச தத்த ஹோமம், சண்டி ஹோமம், சதகண்டி பாராயணம், ஸ்ரவுத யாகம் நடக்கின்றன. ஆக.30ல் நட்சத்திர தோஷ பரிகாரமாக நட்சத்திர சாந்தி யாகம், செப்.16 - 22 வரை மாலை 6:00 - இரவு 7:30 மணி வரை விஜயானந்த சுவாமிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், உலக நன்மைக்காக சீனிவாசர்- பத்மாவதி, முருகன்- வள்ளி, தத்தாத்ரேயர்- அனகாதேவி திருக்கல்யாண வைபவமும் நடக்கின்றன.
தொடர்புக்கு: 98840 27739, 96000 03651.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X