அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
ஆகஸ்ட் 26,2018,07:43  IST

ஆக. 25 வாரியார் பிறந்தநாள்

* அன்பு என்னும் சாணத்தால் மனதை மெழுகுங்கள். அதில் நன்றி என்னும் சந்தனம் தெளித்து, கருணை விளக்கை ஏற்றி வையுங்கள். 'மனித வடிவில் தெய்வம்' என்று உலகம் உங்களை புகழும்.
* கோபம் வரும் போதெல்லாம் கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். அவலட்சணத்துடன் இருப்பதைக் காண்பீர்கள். உடனே கோபம் பறந்தோடி விடும்.
* தர்மவழியில் தேடிய பணம் பல தலைமுறைக்கும் தொடர்ந்து நற்பயன் தரும். பொய், சூழ்ச்சி, வஞ்சனையால் தேடிய பணம் வந்த வேகத்தில் காணாமல் போகும்.
* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. நல்லதை மட்டும் சிந்தியுங்கள். நல்லதை மட்டும் பேசுங்கள்.
* வயதில் மூத்தவர்கள் மட்டும் பெரியவர்கள் அல்ல. பிறர் மீது குறை சொல்லாமல் பெருந்தன்மையுடன் இருப்பவர்களும் பெரியவர்கள் தான்.
* தொழிலில் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரி போல, மனதில் எழும் நல்ல, தீய எண்ணங்களை அலசி ஆராய்ந்து மனதைப் பண்படுத்துங்கள்.
* மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் ஒரே கருவி ஒழுக்கம் தான். அதை உயிராக மதித்துப் போற்றுங்கள்.
* மனைவி தவிர்த்த மற்ற பெண்களை தாயாகக் கருதுங்கள். இதனால் சமுதாயத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி நிலைக்கும்.
* உயிர்கள் வாழ தேவையான அனைத்தையும் கடவுள் வழங்கியிருக்கிறார். ஆசையை கட்டுப்படுத்தி உழைக்கும் மனப்பான்மை இருந்தால் போதும். அனைவரும் வளமுடன் வாழலாம்.
* அன்பினால் பக்தி செலுத்த வேண்டுமே ஒழிய, 'அதைக் கொடு! இதைக் கொடு' என்று ஒருபோதும் கடவுளிடம் பேரம் பேசுவது கூடாது.
* காலையில் எழும் போதும், உணவு உண்ணும் போதும், இரவு துாங்கும் முன்பும் கடவுளின் திருவடிகளைப் பக்தியுடன் வணங்குங்கள்.
* அனைவரிடமும் ஒற்றுமை உணர்வுடன் பழகுங்கள். உயர்வு, மதிப்பு, அழகு இவை தானாகவே உங்களை வந்தடையும்.
* பணிவே வாழ்வின் உயிர்நாடி. பணிவில்லாத மனிதர்கள் வாழ்வில் ஒருபோதும் உயர்வு அடைவதில்லை.
* பிறர் கூறும் கொடிய சொற்களையும் இன்சொற்களாக கருதுங்கள். மறந்தும் கூட பிறர் மனம் நோகும்படி கடுஞ்சொல் பேச வேண்டாம்.
* மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி மனதில் இருக்கிறது. கோடீஸ்வரன் கவலையால் வருந்தலாம். ஏழை மகிழ்ச்சியில் துள்ளலாம். எல்லாம் அவரவர் மனதை பொறுத்ததே.
* மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுய உழைப்பால் கிடைத்த தண்ணீரும் சோறும் தித்திப்பானது.
* மழை நீரின் தன்மை அது விழும் மண்ணின் தன்மையை பொறுத்தது. அது போல ஒரு மனிதனின் தன்மை அவனுடன் பழகும் நண்பர்களைப் பொறுத்து அமையும்.

பாராட்டுகிறார் வாரியார்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X