விநாயகர் பற்றி செய்திகள்
செப்டம்பர் 07,2018,15:39  IST

* பசுஞ்சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமாவு ஆகிய ஏதேனும் ஒன்றில் செய்து விநாயகரை பிடித்து வைத்து வழிபடலாம். 'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று இதை சொல்வார்கள்.
* மா, பலா, வாழை, கரும்பு ஆகியவற்றை நான்கு கைகளில் ஏந்தியபடி ஐந்தாவது கையான துதிக்கையில் கொழுக்கட்டை வைத்திருப்பவர் பாலகணபதி. சோடச விநாயகர் என்னும் பதினாறுவகை வடிவங்களில் இவரே முதலாமவர்.
* விநாயகரை முழுமுதல் கடவுளாக வழிபடுவதற்கு 'காணாபத்யம்' என்று பெயர். இதன்படி விநாயகர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நடத்தி பிரபஞ்சத்தை இயக்குகிறார்.
* திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ள அன்பில் என்னும் சிவத்தலத்தில் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை ரசித்துக் கேட்ட செவிசாய்த்த விநாயகர் அருள் பாலிக்கிறார். மதுரை மீனாட்சி, சிதம்பரம் நடராஜர் கோயில்களில் முக்குறுணி விநாயகருக்கு சன்னதி உள்ளது.
* திங்கட்கிழமை வரும் சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் மனம் புத்துணர்வு பெறும். புதனன்று வரும் சதுர்த்தியில் வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும். வெள்ளியன்று சதுர்த்தி வழிபாடு செய்ய சுபநிகழ்ச்சி தடையின்றி நிறைவேறும்.
* மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலப்பதியில் கோயில் கொண்டிருக்கிறார். யானைமுகத்தை ஏற்பதற்கு முன்புள்ள விநாயகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதை உணர்த்தவே, பெரிய உருவம் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சூறுவை வாகனமாக அமைத்தனர்.
* விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.
* முதற்கடவுள் விநாயகரும், மங்கள மூர்த்தியான ஆஞ்சநேயரும் இணைந்த திருக்கோலம் ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் சுபவிஷயங்கள் இனிதே நிறைவேறும்.
* வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.
* விநாயகரை வழிபட பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பதால் 'கணபதி பூஜை கைம்மேல் பலன்' என்று பழமொழியாகச் சொல்வர்.
* வளர்ந்து முற்றிய வெள்ளெருக்குச் செடியின் வேரில் விநாயகர் உருவம் சுயம்புவாக உருவாகும். இவரை வழிபட்டே சித்தர்கள் அஷ்டமாசித்தி பெற்றனர்.
* நடனக்கலையில் வல்லவரான சிவனைப் போல விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் வல்லவர். இந்த நர்த்தன விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
* திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உக்கிர தெய்வமாக இருந்த போது, ஆதிசங்கரர் அம்மனுக்கு எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். 'உக்கிரம் தணித்த விநாயகர்' என்னும் இவரை வழிபட்டால் மனம் அமைதி பெறும்.
* 'காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து அருள்புரியும் விநாயகர் 'கவான்வின் ஷேர் விநாயக்ஷா' எனப்படுகிறார். ஜப்பானில் உள்ள யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழிபடுகின்றனர்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X