ராகு கேது பெயர்ச்சி பலன் கணித்த விதம்
பிப்ரவரி 01,2019,08:42  IST

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர்ராசியில் இருக்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர்.
தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசுவிற்கும் பிப்.13 பகல் 2:02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2020 ஆக.31 வரை இங்கு தங்கியிருப்பர்.
பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களான குரு, சனியின் நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த ராகு, கேது பெயர்ச்சிக்குள் விருச்சிகத்தில் உள்ள குருபகவான் மார்ச்13ல் அதிசாரமாக தனுசுவுக்கு மாறுகிறார். மே19 முதல் வக்ரமாக விருச்சிகத்திற்கு பின்னோக்கி செல்லும் அவர், அக்.27 ல் தனுசுவிற்கு பெயர்ச்சியாகிறார். தனுசு ராசியில் இருக்கும் சனி இருமுறை வக்ரகதியாக தனுசு ராசிக்குள்ளேயே பின்னோக்கிச் செல்கிறார். இதன் அடிப்படையில் இந்த பலன் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசகர்கள் இன்னொரு அம்சத்தை கவனிக்க வேண்டும். இங்கு தொகுக்கப்பட்டுள்ளது பொதுபலன் மட்டுமே. இதில் சுமாரான பலன் நடக்கும் எனக் குறிப்பிட்டிருந்தாலும் அவரவர் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே கிடைக்கும். ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இயன்றதை செய்தால் போதும் கெடுபலன் குறையும்.
காழியூர் நாராயணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X