விமர்சனத்தை விவேகமுடன் ஏற்போம்
பிப்ரவரி 22,2019,15:31  IST

அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்த போது ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் இருந்தார். இவர் அரசியல்வாதி ஒருவரை திருப்திப்படுத்த ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவத்தினரை வேறொரு இடம் செல்ல உத்தரவிட்டார். அப்போது ராணுவ செயலாளராக இருந்த எட்வின் ஸ்டான்டன் செயல்படுத்த மறுத்ததோடு, 'லிங்கன் ஒரு முட்டாள்' என்றும் கூறினார்.
லிங்கனுக்கு தகவல் சென்றது. ஆனால் அவர் கோபப்படவில்லை. “ஸ்டான்டன் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். ஏனெனில் அவர் நிதானமுடன் செயல்படுபவர். புத்திக்கூர்மை மிக்கவர்” என பாராட்டியதுடன், “என் முட்டாள்தனத்தை சரிசெய்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவரைச் சந்திக்க அழைத்தார்.
உத்தரவை செயல்படுத்த மறுத்ததற்கான காரணத்தை ஸ்டான்டன் தெளிவாகச் சொன்னார். லிங்கனும் அதை ஏற்றதோடு, உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன் பின், “தங்களைக் குறித்து அப்படி ஒரு வார்த்தை சொன்னதற்காக நான் வருந்துகிறேன்'' என்றார்.
''உங்கள் விமர்சனம் என்னை சரிசெய்து கொள்ள உதவியாக இருந்தது,” என்று லிங்கன் பதிலளித்தார். தன்னைப்பற்றிய விமர்சித்த போது கோபம் கொள்ளவில்லை. பழிவாங்கும் உணர்வுடன் பதில் நடவடிக்கை எடுக்கவில்லை. விவேகமுடன் பிரச்னையைக் கையாண்ட லிங்கனின் மனப்பக்குவத்தைப் பாருங்கள். இதே போல இயேசுவும், “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்'' என்கிறார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X