புத்தாண்டு காதல்
ஏப்ரல் 13,2019,10:04  IST

முன்பின் தெரியாத நபரை முகநுால் மூலம் காதலித்து வாழ்வை இழந்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கான கதை இது.
காவிரிபூம்பட்டினத்தில் பிறந்த தர்மதத்தன், குழந்தையாக இருந்த போதே பெற்றோரை இழந்தான். அவனது தாய்மாமாவுக்கு குழந்தை இல்லாததால் தர்மதத்தனை வளர்த்தனர். அவனை அன்புடன் வளர்த்தாலும், தங்களுக்கென வாரிசு வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்தது. கோயில் கோயிலாக வழிபட்டனர். தெய்வ அருளால் பெண் குழந்தை பிறந்தது. 'விசாகா' எனப் பெயரிட்டனர். மகள் பிறந்த பின்னும், தர்மதத்தன் மீது காட்டிய அன்பு குறையவில்லை. காலம் சென்றது. இருவரும் பருவ வயதை அடைந்தனர். ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.
இதைக் கண்ட ஊரார் விசாகாவை கரித்துக் கொட்டினர். “இவளுக்கு அத்தை மகனுடன் என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு! திருமணத்துக்கு முன் இருவருக்கும் என்ன பேச்சு?” என பழித்தனர்.
இதுகேட்டு விசாகா வருத்தமுடன் கோயிலுக்கு சென்றாள்.
“கிருஷ்ணா! நீயும் ராதையும் எவ்வளவு காலம் காதலித்தீர்கள்! உங்கள் காதலில் களங்கம் கண்டதா இந்த உலகம்! நான் என் அத்தை மகனைத் தானே விரும்புகிறேன். அவரது விரல் கூட என் மீது பட்டதில்லையே! அப்படியிருந்தும் களங்கம் கற்பிக்கிறதே ஊர். என்னோடு வந்து ஊராரிடம் என் காதல் பற்றி சொல்” என வேண்டினாள்.
கிருஷ்ணர் அவள் முன் தோன்றி காதலைக் களங்கப்படுத்திய ஊராரைக் கண்டித்தார். மக்களும் மன்னிப்பு கேட்டனர். அத்துடன் அவளது தயவால், தங்களுக்கு கடவுள் தரிசனம் கிடைத்ததை எண்ணி பாராட்டினர். இவ்வளவு நடந்த பின்னும், விசாகாவின் மனம் புண்படவே செய்தது. ஊரார் தன் கற்பின் மீது சந்தேகப்பட்டதை எண்ணி அழுதாள்.
“என் கற்புக்கு களங்கம் கற்பித்த ஊராரின் முன் உன்னை திருமணம் செய்யவிரும்பவில்லை. கன்னிமாடம் அமைத்து அதிலேயே வாழ்ந்து மடிகிறேன்” என்றாள் விசாகா. எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக இருந்ததால், மாடம் அமைத்தனர் பெற்றோர். தர்மதத்தன் வெளியூர் போய் விட்டான்.
மாடத்திலிருந்த அவள், “கிருஷ்ணா! நான் மறுபிறவியில் இந்த பெற்றோர் வயிற்றில் பிறக்க வேண்டும். என் அத்தான் தர்மதத்தனை காதலித்து திருமணம் செய்ய வேண்டும்” என வேண்டினாள்.
அதன்படியே மறுபிறப்பில் அவள் அவனையே மணம் புரிந்தாள்.
கன்னியரே! காதல் புனிதமானது. பழகுபவர்களெல்லாம் நல்லவர்கள் என சொல்ல முடியாது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X