நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!
ஆகஸ்ட் 26,2019,09:19  IST

''நாலு பேர் கூடும் இடத்தில் நாகரீகமாக நடக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும்''.
பொது இடத்தில் அமரும் போது, நல்லவர்கள் அருகே உட்காருங்கள். அங்கே பேசுவோருடன் இணைந்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். பேச்சு இறைவனைப் பற்றியதாக இருக்க வேண்டும்.
ஒரு கூட்டத்திற்கு சென்றால், கிடைக்கும் இடத்தில் உட்கார வேண்டும். பெரிய வி.ஐ.பி., என்பதற்காக, ஏற்கனவே அமர்ந்திருப்பவரை எழுந்திருக்கச் சொல்வது, அவர்களைத் தள்ளிக் கொண்டு முன்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது மற்றவர் வெறுப்பைச் சம்பாதிக்க வழிவகுக்கும். வட்டமாக அமர்ந்து பேசும் போது, நடுவில் அமர்ந்து, தன்னை தனித்தன்மை கொண்டவராக காட்ட முயற்சிக்க கூடாது.
தவிர்க்க முடியாத காரணத்தால் ஒருவர் வெளியே செல்ல நேர்ந்தால், அவர் வரமாட்டார் என தெரிந்தால் மட்டுமே, அவரது இருக்கையில் அமரலாம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X