ஒருமுறை நாயகம், தாயிப் என்னும் நகருக்கு இறைப்பணிக்காக சென்றிருந்தார். அந்த ஊர் தலைவனான அப்தயலீல் என்பவனுக்கு இது பிடிக்காமல் அடியாட்களை அனுப்பினான். அவர்களும் கல்லெறிந்து தாக்கினர். அப்போது ஒரு வானவரை அனுப்பி வைத்தான் இறைவன்.
''இறைத்துாதரே! தாங்கள் அனுமதித்தால் தாயிப் நகரில் வாழும் மக்களை தண்டிக்கிறேன்'' என்றார்.
''வேண்டாம். இதை இப்படியே விட்டு விடுங்கள். அந்த குடும்பத்தை சேர்ந்தவர் சிலராவது அல்லது அவர்களின் வம்சத்தினராவது நல்வழியில் நடப்பர்'' என்றார் நாயகம்.