கேளுங்க சொல்கிறோம்!
அக்டோபர் 11,2019,10:17  IST

* பிரதோஷத்தன்று நந்தியை தொடலாமா?
க. திவ்யா, காஞ்சிபுரம்.

வழிபடலாம். ஆனால் தொடக்கூடாது. தொட்டு வணங்குதல், காதில் வேண்டுகோள் சொன்னால் எதிர்மறை விளைவு ஏற்படும்.

* கோளறு பதிகம் படித்தால் கிரக தோஷம் நீங்குமா?
மா.நடராஜன், மதுரை

'ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்கிறார் இதை எழுதிய திருஞானசம்பந்தர். கிரக தோஷத்தில் இருந்து விடுபட்டு அரசரைப் போல வாழ்வர் என்பதே இதன் பொருள்.

திருமண விழாவில் வாழைமரம் கட்டுவது ஏன்?
எல்.தர்ஷினி, திருவள்ளூர்

திருமணம் நடக்கும் இடம் மங்களம் நிறைந்தது. இதனடிப்படையில் வீடு, திருமண மண்டபத்தில் மங்களச் சின்னமான வாழை, மாக்கோலம், தோரணம், விளக்குகள் இருப்பது அவசியம்.

* மயிலுக்கு அரிசி இட்டால் நன்மையா?
எம். சாதனா, கோவை

பசு, காகத்திற்கு உணவு அளித்தால் போதும். மயில், மான் போன்றவற்றை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. மயிலுக்கு அரிசி இட்டால், உணவளித்த புண்ணியம் கிடைக்கும்.

நதி பூஜையின் சிறப்பு என்ன?
எஸ். பத்மா, சென்னை

கங்கை, யமுனை, காவிரி போன்ற நதிகளால் தான் நம் நாடு புனிதமாக திகழ்கிறது. 'நீரின்றி அமையாது உலகு' என திருக்குறள் சொல்கிறது. நதிகளைத் தாயாக போற்றுகிறது வேதம். நதிகளை பூஜிப்பது சிறந்த பரிகாரம்.

கைலாய யாத்திரை செல்ல விதிமுறைகள் உண்டா?
என்.ரகு, திருப்பூர்

சிவனின் இருப்பிடமான கைலாயத்தை தரிசிக்கிறோம் என்பதே முதல் தகுதி. அதன் புனித தன்மையை விளக்கும் புத்தகங்களை படித்து, மனப்பக்குவம் பெறலாம். சுற்றுலாவாக கருதகூடாது. யாத்திரைக்கு முன் தினமும் சிவாலய வழிபாடு, விரதம் மேற்கொள்ள வேண்டும்.

* வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?
த.நேரு, வெண்கரும்பூர்

தவறு. துர்க்கைக்கு ஏற்றும் எலுமிச்சை தீபத்தை கோயிலில் தான் ஏற்ற வேண்டும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X