புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாது இருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய்பாதிரிப் புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே
பொருள்: உலகில் வாழும் பக்தர்கள் மீது இரக்கம் காட்டும் திருப்பாதிரிப் புலியூர்ச் சிவனே! நீர் வளம் மிக்க கங்கையாற்றைச் சிவந்த சடையில் தாங்கியவனே! தீயைப் போலச் செந்நிறம் கொண்டவனே! புண்ணியமூர்த்தியே! புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடியை மறக்காமல் இருக்க வரம் தருவாயாக.