'காப்பி' அடிக்காதீர்!
பிப்ரவரி 20,2020,12:21  IST

நிறுத்தம் ஒன்றில் பேருந்து நின்றது. தள்ளாடியபடி பாட்டி ஒருத்தி ஏறினாள். எல்லா இருக்கையிலும் பயணிகள் இருந்ததால், பாட்டிக்கு இடம் இல்லை. “பாட்டி! இதோ இந்த சீட்டில வந்து உட்காருங்க!” என எழுந்தார் கண்டக்டர்.
தளர்ந்த நடையோடு பாட்டி அமர்ந்தாள்.
“மகராசா! பிள்ளை குட்டியோட நல்லா இருக்கணும்!” என வாழ்த்தினாள்.
“என்ன உதவி செய்துட்டேன்! இதுக்குப் போயி நீங்க....” என்றார் அவர்.
இதைக் கேட்டு,''இந்த பயபுள்ள என்ன பண்ணிட்டான்னு கிழவி இப்படி தலையில துாக்கி வெச்சு ஆடுறா! கண்டக்டருக்கே இவ்வளவு மரியாதைன்னா எனக்கு எப்படி இருக்கும்?'' என எண்ணினார் டிரைவர்.
அதற்குள் அடுத்த நிறுத்தம் வந்தது. கிழவர் ஒருவர் தள்ளாடியபடி ஏறினார். அவருக்கு யாரும் இடம் தரவில்லை.
இதுதான் நேரம் என்று டிரைவர் எழுந்தார். “ஐயா! இங்க வந்து என் சீட்டில உட்காருங்க! ” என்றார்.
கண்டக்டர் பாணியில் டிரைவர் நடந்தால், பயணிகளின் நிலை என்னாகும் என யோசித்துப் பாருங்கள்.
இப்படித்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். அடுத்தவர்களைப் பார்த்து அப்படியே நடக்கிறோம்.
அவரவர் இயல்புக்கு ஏற்ப வாழாவிட்டால் விளைவு விபரீதமாகும் என்பதற்கான உதாரணம் இது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X