வேண்டாமே அகந்தை!
மே 22,2020,18:34  IST

கண்ணனின் நெருங்கிய நண்பனான அர்ஜூனனுக்குள் அகந்தை தலை நீட்டியது. ''கண்ணனுக்கு தேவையான பணிவிடைகளை நான்தான் செய்கிறேன். கண்ணனுக்கு என்னை விட சிறந்த பக்தர் யாருமில்லை'' என எண்ணினான்.
அவனுக்கு பாடம் கற்பிக்க முடிவெடுத்தான் கண்ணன்.
''அர்ஜூனா நாம் இருவரும் உலா போகலாமா'' என்றான்.
''ம்! செல்லலாமே'' என்றான்.
வழியில் குடிசை ஒன்று தென்பட்டது. அதில் அப்பா, அம்மா, மகன் என மூவர் இருந்தனர். இருவரும் குடிசைக்குள் நுழைந்தபோது கண்ணனை பார்த்ததும் அவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.
''தேவர்களும், முனிவர்களும் உன்னைக் காண தவமிருக்கின்றனர். ஆனால் நாங்கள் உன்னைக் காண என்ன பேறு பெற்றோம்'' என்றார் தந்தை. ஆனால் உனக்கு தருவதற்கு விலை உயர்ந்த பொருள் ஏதுமில்லையே'' என வருந்தினர்.
''ஐயா! பொய் சொல்கிறீர்கள்! உலகமே விலை பெறக் கூடிய ஒன்று உள்ளது. கேட்டால் தருவீர்களா!'' என்றான் கண்ணன்.
''கண்ணா! எதுவாயிருந்தாலும் தருவோம்'' என்றார் தந்தை.
''இதோ இருக்கிறானே! உங்கள் பிள்ளை! அவன் வேண்டும்! அவனது உடம்பைச் சரிபாதியாக அறுத்து அதில் எனக்கு வலப்பாதியை தர வேண்டும். ஆனால் அப்போது யாருக்கும் கண்ணீர் வரக்கூடாது'' என்ற நிபந்தனையும் விதித்தான் குறும்புக் கண்ணன்.
கணவனும், மனைவியும் தயங்கவில்லை. மகனை உட்கார வைத்து சரிபாதியாக அறுக்க ஆரம்பித்தனர். அவர்கள் கண்ணில் கண்ணீர் வரவில்லை. ஆனால் மகனின் இடக்கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதைப் பார்த்த கண்ணன் ''நிறுத்துங்கள் இந்த காணிக்கை வேண்டாம்'' என்றான்.
''கண்ணா! வலது கண்ணிற்கு கிடைத்த பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லையே என இடக்கண் அழுகிறது! நீ கேட்டது வலது பகுதிதானே! ஆதலால் மறுக்காமல் ஏற்க வேண்டும்'' என்றார் தந்தை.
அதைக் கேட்டு பரவசம் அடைந்த கண்ணன் பெற்றோர் மனம் குளிர மகனைப் பிழைக்கச் செய்தான்.
இதைக் கண்ட அர்ஜூனனுக்கு அகந்தை மறைந்தது.
''கண்ணா! எனக்குச் சாரதியாய் இருந்தாய்! கீதை உபதேசித்தாய்! இழந்த நாட்டை மீட்டுக் கொடுத்தாய்! இந்த உதவிக்கெல்லாம் மேலான உதவியை இப்போது செய்துள்ளாய்!''
''அகந்தைப் படுகுழியில் விழாமல் பாதுகாத்தாய்! இனி நானே சிறந்தவன் என கர்வப்பட மாட்டேன் என கண்ணீர் மல்க சரணடைந்தான்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X