சந்தேகம் தீர்த்த 'உப்பு'
மே 22,2020,18:37  IST

காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர அபூர்வமான லிங்கம் ஒன்றுள்ளது. அதுதான் உப்பு லிங்கம்!
ஒருமுறை பாஸ்கர ராயர் என்னும் மகான் தரிசனத்திற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது சிலர், ''இந்தக் கோயிலில் மூலவராக உள்ள ராமலிங்கத்தை சீதா தேவி மணலில் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது அந்த லிங்கம் கரைந்திருக்க வேண்டுமே!'' என வாதம் செய்தனர்.
சந்தேகம் கொண்ட அவர்களின் மூலமாக உப்பு கொண்டு வரச் செய்தார் பாஸ்கர ராயர். அதில் லிங்கம் ஒன்றைச் செய்து பிரதிஷ்டை செய்தார். அதற்கு அபிேஷகம் செய்தும் காண்பித்தார். அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது.
சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. அபிஷேகம் நடத்தியும் கரையவில்லை.
'அம்பிகையை வழிபடும் மனிதனான நான் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாத போது, கடவுளின் அவதாரமான ராமரின் மனைவி சீதை பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் அதிசயம் என்ன இருக்கிறது?' எனக் கேட்டார்.
வலிமை மிக்க இதற்கு 'வஜ்ர லிங்கம்' என்றும் பெயருண்டு. இவரை தரிசித்தால் நோய் தீரும். மனம், உடல் பலம் பெறும். ராமேஸ்வரம் சென்றால் உப்பு லிங்கத்தை தரிசிக்க மறவாதீர்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X