நடராஜர் 'பயோடேட்டா'
ஜூன் 30,2020,10:13  IST

ஜூன் 28 - ஆனி உத்திரம்

* வலது முன்கை 'அஞ்சாதே' என்பதை உணர்த்துகிறது.
* கையில் உள்ள உடுக்கையின் பெயர் டமருகம்.
* வலது காதில் பாம்பு வடிவ வளையமும், இடது காதில் தோடு வளையமும் உள்ளது.
* சுற்றியிருக்கும் நெருப்பு வட்டம் பேரண்டத்தைக் குறிக்கும்.
* கழுத்தில் உள்ள பாம்பு 'குண்டலினி' சக்தியைக் குறிக்கும்.
* கையிலுள்ள நெருப்பு முன்று காலத்தையும் உணர்த்தும்.
* நடராஜரின் துாக்கிய திருவடி குஞ்சிதபாதம் நடனமாடும் மேடை இரட்டைத் தாமரைகளால் ஆனது.
* நடராஜர் காலடியில் கிடக்கும் அசுரன் அபஸ்மாரன் நடனமாடும் பீடத்திற்கு 'மஹாம்புஜ பீடம்' என்று பெயர்.
* நடராஜர் கால் மாறி ஆடிய தலம் மதுரை
* தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் சிதம்பரத்திற்கு தில்லை வனம் என்ற பெயர் வந்தது.
* ''மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை'' என்பது சிதம்பர ரகசியம் ஆகும்.
* டமருகத்திலிருந்து தான் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் பிறந்தது.
* நடராஜரின் நடனத்தை கண்டுகளிப்பவள் சிவகாமி.
* சிதம்பரத்தில் நடராஜர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' எனப்படும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X