அன்பால் அரவணைத்திடு
ஆகஸ்ட் 14,2020,16:06  IST

கிராமத்து விவசாயி ஒருவர் பாடுபட்டு மகனை படிக்க வைத்தார். படித்த அவனும் அரசு அதிகாரியாக நகரத்தில் பணிபுரிந்தான். சில மாதம் கழித்து மகனைப் பார்க்க சென்றார் விவசாயி.
சக பணியாளர்களுடன் மகன் உரையாடுவதைக் கண்டு விவசாயியின் மனம் குளிர்ந்தது. கடைநிலை ஊழியர் ஒருவர், ''ஏதாவது ஒரு பிரச்னை என்று மனு கொடுக்க வந்து விடுகிறீர்கள். இன்னைக்கு மீட்டிங் நடப்பதால் யாரும் மனு கொடுக்க முடியாது.'' என அலட்சியப்படுத்தினார். இதற்கு காரணம் விவசாயியின் ஏழ்மைக் கோலம் தான்!
இதை கவனித்த அதிகாரி, ''இவர் என் தந்தை, வயதுக்காவது மரியாதை கொடு. பதவியில் இருப்பதற்காக மற்றவரை ஏளனம் செய்யாதே. பகைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே ஆண்டவரின் கட்டளை'' என்றார். தவறை உணர்ந்த ஊழியர் மன்னிப்பு கேட்டார்.
ஏழ்மையிலிருந்து மேல்நிலைக்கு வந்ததும் கடந்த காலத்தை மறந்து விடுவர். அந்தஸ்து கருதி ஏழ்மையில் வாடும் நண்பர், உறவினர்களை சிலர் புறக்கணிப்பர். அன்பால் எல்லோரையும் ஆதரிக்க வேண்டும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X