பிராணிகளை நேசிப்போம்
செப்டம்பர் 04,2020,17:17  IST

ஒட்டகம் ஒன்று வேதனையால் கண்ணீருடன் நிற்க கண்டார் நாயகம். அதன் தலையிலும் நெற்றியிலும் தடவிக் கொடுக்க, அது அமைதியடைந்தது. ''இந்த ஒட்டகம் யாருடையது?'' என கேட்டார்.
''என்னுடையது'' என்றான் ஒரு இளைஞன்.
''வாயில்லாப் பிராணி மீது இரக்கமில்லையா? இந்த ஒட்டகம் கண்ணீர் சிந்துவதை பார். இனியாவது வயிறார உணவு கொடு'' என்றார்.
''செழிப்பான காலத்தில் ஒட்டகத்தின் மீது பயணம் செய்பவர்கள் அவற்றுக்கான உணவை பூமியில் இருந்து கொடுங்கள். பஞ்ச காலத்தில் பயணம் செய்தால் அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள்.'' என்றார்.
மழை காலத்தில் புல் பூண்டுகள் முளைத்திருக்கும். அப்போது ஒட்டகங்கள் மேய வாய்ப்பு கிடைக்கும். வறட்சி காலத்தில் ஓட்டகங்களை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள். ஏனெனில் தங்குமிடத்தை அடைந்த பின்னரே பிராணிகளின் பசி, தாகத்தை போக்க முடியும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X