கனிவு காட்டுங்கள்
செப்டம்பர் 30,2020,16:10  IST

ஈவான்ஸ் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவரிடம் ஒருநாள், ''ஈவான்ஸ்... நாளை உன் வீட்டிற்கு வருகிறேன்'' என ஆண்டவரின் குரல் கேட்டது. மறுநாள் ஆவலுடன் காத்திருந்தார். அப்போது தெருவில் முதியவர் ஒருவர், '' எனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கிடைக்குமா'' எனக் கேட்டார். அவருக்கு ரொட்டித் துண்டுகளை கொடுத்தார். சில மணி நேரம் கழிந்தது. சிறுவன் ஒருவனை துரத்தியபடி பாட்டி ஒருத்தி வீட்டு வாசலுக்கு வந்தாள். சிறுவன் அவளிடமிருந்த ஆப்பிளை திருடியதே விரட்டியதற்கு காரணம். அவன் ஒரு அனாதை என்பதை புரிந்த கொண்டு, ''பாட்டி... அவனைத் தண்டிக்காதீர்கள், அவனது தவறை பொறுத்துக் கொள்ளுங்கள்'' என சமாதானப்படுத்தினார். மாலை நேரமானது. ஆண்டவர் இன்னும் வரவில்லையே என காத்திருந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் சென்றாள். பனிப்பொழிவால் அவள் நடுங்குவதை கண்டு போர்வை ஒன்றை கொடுத்தார்.
அன்றிரவு மீண்டும் குரல் ஒலித்தது.
''உன்னை இன்று மூன்று முறை சந்திக்க வந்தேன். ஒவ்வொரு முறையும் கனிவுடன் உபசரித்தாய்'' என்றார். எளியவர் மீது இரக்கம் காட்டுவது ஆண்டவர் மீது அன்பு காட்டுவதற்கு சமம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X