சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
அக்டோபர் 29,2020,15:03  IST

* சரஸ்வதி பற்றி குமரகுருபரர் பாடிய நுால் சகலகலாவல்லி மாலை.
* ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் திருவாரூர் மாவட்டம் கூத்தனுாரில் சரஸ்வதிக்கு கோயில் கட்டினார்.
* கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் உள்ள சரஸ்வதியின் பெயர் சாரதாம்பாள்.
* மணிமேகலை காப்பியம் சரஸ்வதியை 'சிந்தாதேவி' எனக் குறிப்பிடுகிறது.
* அரசு வழங்கும் ஞானபீடம் என்னும் விருதில் இடம் பெறும் சின்னம் வாக்தேவி (சரஸ்வதி)
* ராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய பட்டம் பாஷ்யக்காரர் (சிறந்த உரையாசிரியர்)
* சரஸ்வதிக்குரிய திதி நவமி. நட்சத்திரம் மூலம்
* மயில் வாகன சரஸ்வதியை வடிவமைத்த ஓவியர் ரவிவர்மா.
* பேச்சுக் கலைக்கு அதிபதி என்பதால் சரஸ்வதியை வாக்தேவி என்பர்.
* நம் நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதிக்கு நாமகள் என்று பெயர்.
* எல்லா உயிர்களின் நாக்கிலும் சரஸ்வதி குடியிருப்பதாக கந்தபுராணம் கூறுகிறது.
* மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐவரை பவுத்தர்கள் வழிபடுகின்றனர்.
* சமயம் கடந்த தெய்வம் என்று சரஸ்வதியை போற்றுகிறார் உ.வே.சாமிநாத ஐயர்.
* சரஸ்வதியின் கையில் உள்ள ஜபமாலைக்கு 'அட்சமாலை' என்று பெயர். இதில் 51 மணிகள் இருக்கும்.
* சரஸ்வதி அந்தாதி எனும் பாடலை எழுதியவர் கம்பர்.
* திபெத், நேபாளம், இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளில் சரஸ்வதி வழிபாடு உள்ளது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X