நானா என்பவர் ஷீரடி பாபாவின் பக்தர். அவரது முதுகில் கட்டி இருந்ததால் வலியால் சிரமப்பபட்டார். மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலி அதிகமானதால் மருத்துவரின் உதவியை நாடினார். ''ஆப்பரேஷன் மூலமாக கட்டியை அகற்ற வேண்டும்'' என்றார் மருத்துவர். நாளை ஆப்பரேஷன் என்ற நிலையில் பயத்துடன் பாபாவின் படத்தை தலையணைக்கு அடியில் வைத்தபடி படுத்திருந்தார். கூரையில் இருந்து ஓடு உடைந்து முதுகின் மீது விழ கட்டி உடைந்தது.
இதையறிந்த மருத்துவர்கள் பரிசோதித்து, ''இனி ஆப்பரேஷன் தேவையில்லை'' என தெரிவித்தனர்.
சிலநாட்கள் கழிந்தபின் பாபாவைத் தரிசிக்க ஷீரடி சென்றார் நானா. அப்போது, ''பக்தரான நானாவின் கட்டியை என் விரலால் அழுத்தி உடைத்தேன்'' என அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட நானாவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.