இந்த வாரம் என்ன
நவம்பர் 09,2020,09:26  IST

நவ.6, ஐப்பசி 21: முகூர்த்த நாள், மாயவரம் கவுரிமாயூர நாதர் உற்ஸவம் ஆரம்பம், பத்ராசலம் ராமர் புறப்பாடு, உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகள் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருத்தணி முருகன் கிளி வாகனம்

நவ.7, ஐப்பசி 22: திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் உற்ஸவம் ஆரம்பம், மாயவரம் கவுரி மாயூர நாதர் வெள்ளி படிச்சட்டத்தில் பவனி, திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, சோழிங்கநல்லுார் அமிர்தவல்லித்தாயார் திருக்கல்யாணம், சக்தி நாயனார் குருபூஜை, வாரியார் நினைவுநாள்

நவ.8, ஐப்பசி 23: திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் சந்திரபிரபையில் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்

நவ.9, ஐப்பசி 24: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் சேஷ வாகனம், மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்சம், அம்மன் காமதேனு வாகனம்

நவ.10, ஐப்பசி 25: குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருமயம் ஆண்டாள் புறப்பாடு, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், மாயவரம் கவுரிமாயூர நாதர் பூதவாகனம், திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் கருட வாகனம்

நவ.11, ஐப்பசி 26: முகூர்த்த நாள், ஸ்ரீரங்கம் பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் அனுமன் வாகனம்

நவ.12, ஐப்பசி 27: முகூர்த்த நாள், பிரதோஷம், சிவன் கோயில்களில் மாலை நந்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X