விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்
கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் அழித்தவனே! விண்ணுலகில் இருந்து விழுந்த ஆகாய கங்கையை தன் தலையில் தாங்கி நின்றவனே! வணங்கியவர்களின் பாவச்சுமைகளைப் போக்குபவனே! கல்மனம் கொண்ட அசுரர்களுக்குரிய திரிபுரம் என்னும் பறக்கும் கோட்டைகளை பொடியாக்கியவனே! சிவபெருமானே! திருவாரூரில் அரநெறியப்பர் என்னும் பெயரில் அருள்புரிபவனே! உன்னை போற்றுகிறேன்.