தமிழகத்தில் அறுபடைவீடுகள் இருப்பது போல இலங்கையிலும் உள்ளன. அவை கதிர்காமம், நல்லுார் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லுான்றி, மேலைப்புலோலி ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் கோயில் கட்ட கொடுத்தால் வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.
சிவன் கோயில்களை ஈஸ்வர கிருஹம், ஈஸ்வரம் என்றும், மகாவிஷ்ணு கோயில்களை விஷ்ணு கிருஹம், விண்ணகரம் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபட்டால் திருமண வரம், குழந்தைப்பேறு, நல்ல வேலை கிடைக்கும்.
ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் கிடைக்கும். புதன் பலம் இல்லாதவர்கள் புதன் கிழமையன்று பெருமாளை வழிபடுவது நல்லது.
கிரகண காலத்தில் எல்லா தீர்த்தங்களும் கங்கைக்குச் சமமான புனிதம் பெறும்.
வாகன விபத்தை தடுக்க செவ்வாய்கிழமையில் சம்பங்கி மலரால் சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபடலாம்.
ஒரு செயல் தொடங்கும் முன் விநாயகருக்கு தேங்காய் உடைப்பது, பசுவிற்கு வாழைப்பழம் தருவதும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
கோயில்களில் சிவனுக்கு முன்புறம் தான் நந்தி இருக்கும். ஆனால் திருமுல்லைவாயில், திருவத்திபுரம், செய்யாறு, திருவலம், பெண்ணாகரம் கோயில்களில் நந்தி சிவனுக்கு பின்புறமாக இருக்கிறார்.