நோயின்றி வாழலாம்
நவம்பர் 09,2020,09:28  IST

எகிப்திய மன்னர் முகவ்கிஸ் மதினாவிற்கு மருத்துவர் ஒருவரை அனுப்பி வைத்தார்.
அவரது உதவி தேவைப்படாத நிலையிலும், மதினாவாசிகளுக்கு மருத்துவம் செய்யும்படி தெரிவித்தார் நாயகம். மருத்துவரை நாடி யாரும் வரவில்லை. அந்நிய மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் யாரும் தன்னை பார்க்கவில்லையோ என வருந்தினார் மருத்துவர்.
''தாய் நாட்டிற்கு திரும்புங்கள். இறையருளால் தங்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படவில்லை. பசித்த பின்னரே உணவை கையில் தொடுவோம். அதனால் நோய் எங்களை அதிகம் அண்டுவதில்லை'' என தெரிவித்தார் நாயகம். இந்த பதிலைக் கேட்ட மருத்துவர் ஆறுதல் அடைந்தார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X