பொய்யால் நேர்ந்த கொடுமை
நவம்பர் 09,2020,09:31  IST

சிரியா நாட்டின் தளபதியான நாகமான் என்பவன் குஷ்டத்தால் அவதிப்பட்டான். எலிசாவின் உதவியால் குணம் பெற்றான். அதற்கு அன்பளிப்பாக காணிக்கை தருவதாக தெரிவித்தும் அவர் அதை ஏற்கவில்லை. வருத்தமுடன் நாகமான் சென்றபோது எலிசாவின் பணியாளன் கேயாசி பின்தொடர்ந்து, ''தளபதியாரே! உங்களிடம் அன்பளிப்பை வாங்கிவரும்படி என்னை எஜமானர் அனுப்பினார். அவரது இரண்டு மகன்களுக்கு ஆளுக்கொரு வெள்ளிப்பணமும், ஆடையும் தாருங்கள்'' என பொய் சொன்னான். அதை நம்பி இரண்டு வெள்ளியும், இரண்டு ஆடைகளும் காணிக்கை கொடுத்தான். உடனடியாக தன் வீட்டுக்கு சென்று பொருட்களை மறைத்து வைத்தான் கேயாசி. இதையறிந்த எலிசா கோபமுடன், ''நாகமானின் குஷ்ட ரோகம் உன்னையும், உன் சந்ததியையும் பீடிக்கும்'' என சபித்தார். வளமாக வாழலாம் என பலர் பொய் சொல்கிறார்கள். ஆனால் பொய்யர்கள் அக்னியும், கந்தகமும் எரிகின்ற கடலிலே பங்கு பெறுவர் என பைபிள் எச்சரிக்கிறது. அதுபோலவே குஷ்டத்தால் அவதிப்பட்ட கேயாசி சமூகத்தை விட்டே விலகி வாழ்ந்தான்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X