பகைவன் கூட நண்பனே!
நவம்பர் 27,2020,12:33  IST

ஒரு சமயம் நாயகத்தை கொலை செய்வதற்காக எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்து மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பினார். அவரை பிடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர். அதைப் பெற விரும்பிய சுராக்கா என்பவன் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றான். அப்போது தோழர் அபூபக்கருடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அபூபக்கர் பதட்டமுடன் இருப்பதைக் கண்டு, ''இறைவன் நம்முடன் இருக்கிறான். பயப்பட வேண்டாம்'' என்றார். அதன் பின் அவருடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டார். அதன் பயனாக சுராக்கா பயணித்த குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணற தொடங்கியது. பயந்து போன சுராக்கா செய்வதறியாமல் தவித்த போது, நாயகம் பெருந்தன்மையுடன் உதவி செய்தார். மன்னிக்கும் குணம் இருந்தால் பகைவரையும் நண்பராக ஏற்கும் பக்குவம் ஏற்படும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X