திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையின் துவக்கத்தில் இந்திர லிங்க கோயிலை தரிசித்த பின்னரே கிரிவலம் செய்ய வேண்டும். வழியிலுள்ள அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், நேர் அண்ணாமலை, வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கங்களை தரிசித்தபின், சுடுகாட்டிலுள்ள ஈசான்ய லிங்க கோயிலுக்குச் செல்ல வேண்டும். ''மனிதா! நீ என்ன சம்பாதித்தாலும் இறுதியில் சேருமிடம் இதுவே'' என்பதை இந்த வழிபாடு உணர்த்தும். பின் அண்ணாமலையார் கோயிலுக்குள் வழிபட்டு கிரிவலத்தை நிறைவு செய்யுங்கள்.