சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
நவம்பர் 27,2020,16:27  IST

* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.
* கார்த்திகை தீபத்தன்று காலையில் ஏற்றும் தீபம் பரணி தீபம்.
* அருணாசலம் என்பதன் பொருள் சிவந்த மலை
* திருவண்ணாமலை உற்ஸவர் பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர்.
* கார்த்திகை அகல்தீபம் என்னும் அஞ்சல் முத்திரை 1997 டிச.12ல் வெளியானது.
* அருணகிரிநாதர் கிளி வடிவில் முக்தி பெற்ற கோபுரம் கிளி கோபுரம்.
* சிவன், முருகன், சூரியனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை
* அண்ணாமலையாரை மனதில் நினைத்தாலே முக்தி கிடைக்கும்.
* திருஞான சம்பந்தர் பாடிய தேவார பதிகங்களில் ஒன்பதாம் பாடலில் அண்ணாமலையாரை பற்றியதாக இருக்கும்.
* முருகன் பாடலான பழநித்திருப்புகழில் 'தீப மங்கள ஜோதி நமோ நம' என்று அண்ணாமலையாரை பற்றி பாடப்பட்டுள்ளது.
* ஆடிப்பூரநாளில் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடக்கும்.
* திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் சிவலிங்க வழிபாடு தொடங்கியது.
* புராண காலத்தில் மகாசிவராத்திரி தொடங்கியதும் திருவண்ணாமலையில் தான்.
* 25 ஏக்கர் பரப்பில் ஏழு பிரகாரத்துடன் அமைந்த தலம் திருவண்ணாமலை.
* சிலை பிரதிஷ்டையின் போது அஷ்ட பந்தனம் என்னும் மருந்து சாத்துவது வழக்கம். இங்கு சொர்ண பந்தம் என்னும் தங்கத்தை வைத்து லிங்கத்தை நிறுவியுள்ளனர்.
* விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் ஆகியோர் வழிபட்ட சிவ லிங்கங்கள் இங்குள்ளன.
* திருவெம்பாவை என்னும் பாவை நோன்பு பாடல்களை மாணிக்கவாசகர் இத்தலத்தில் எழுதினார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X