உலகின் பிரம்மாண்ட கோயில்கள்
நவம்பர் 27,2020,16:40  IST

அங்கோர்வாட் விஷ்ணு கோயில், கம்போடியா
* 1113 - 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.
* 162.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது.
* கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.
* பள்ளி கொண்டநிலையில் விஷ்ணு இங்கிருக்கிறார். ஸ்ரீரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி
* 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.
* 156 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தென்னிந்தியாவின் பெரியராஜ கோபுரம் இங்குள்ளது (239 அடி)
* 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
* 11ம் நுாற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
* 44 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு மூலவர் 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையுடன் 23 அடி உயர பாணத்துடன் இருக்கிறார்.
* 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.
* தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் உள்ளது. நடராஜர் கோயில், சிதம்பரம்
* பூலோக கைலாயமான இதுவே முதல் சிவத்தலம்.
* 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.
* சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது.
* கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
* கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள்ளன. அக்ஷர்தாம் கோயில், டெல்லி
* மகான் சுவாமி நாராயணருக்காக கட்டப்பட்டது.
* 23 ஏக்கர் பரப்பு கொண்டது.
* கருவறையில் 7 அடி உயர தங்கச்சிலை உள்ளது.
* நினைவிடம், ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பூங்கா உள்ளன.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X