போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பெர்டினான்ட் மெகல்லன் 1480-1521ல் வாழ்ந்தவர். பல ஆய்வுகளை அவர் செய்தார். கி.பி.1505ல், பூமி உருண்டை என்று கண்டு பிடித்தவர் அறிவித்தவர் அவரே. உலகமும் அதை ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில் வாழ்ந்த கோப்பர்நிக்கஸ் என்ற வான் ஆராய்ச்சியாளரும், அவருக்குப் பின் வந்த கலிலியோவும் மேற்கண்ட கண்டுபிடிப்பை உறுதி செய்தனர். மேலும், பூமி அந்தரத்தில் தொங்குகிறது எவ்றும், சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என்றும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தனர். ஆனால், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் கி.மு.700ல் வாழ்ந்த தேவனுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா, ""அவர்(கர்த்தர்) பூமியின் உருண்டையின் மேல்வீற்றிருக்கிறார்'' (ஏசா.40:22) என்று அறிவித்துள்ளார். கி.மு.2600ல் வாழ்ந்த யோபு என்ற பக்தன், ""அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார் (யோபு26:7) என்று
கூறியுள்ளனர். இவர்கள் எதைக் கொண்டு இந்த உண்மையைக் கண்டுபிடித்தனர். எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லவராகிய தேவனே அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்து எழுதியுள்ளனர். ஏனெனில், ""வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் (தேவனுடைய மனிதர்களுக்கு) அருளப்பட்டிருக்கிறது'' (2தீமோ.3:16) என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்தீர்களா! அறிவியலாளர்கள் முன்னால், ஆன்மிகம் பேசுவோர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற கருத்தை இனியேனும் மாற்றிக் கொள்வீர்களா! ஆன்மிகமே அறிவியலுக்கு அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.