வேண்டாமே மனஅழுத்தம்
மார்ச் 27,2021,16:08  IST

* மனஅழுத்தத்துக்கு இடம் தராதே. மனஅழுத்தம் தரக்கூடிய எந்த விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பது தான், அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.
* உன் மனதிற்குள் இருக்கும் இருளை வெளியேற்றினால் தான் உண்மையான தெய்வீகத்தை உணர முடியும்.
* நடந்து முடிந்ததைப் பற்றியும், நடக்கவிருப்பதைப் பற்றியும் மட்டும் நினைப்பது வீண் முயற்சியே.
* எல்லையற்ற ஆற்றல் கொண்ட கடவுள் இருக்கிறார் என உணர்வதே ஞானத்தின் தொடக்கநிலை.
* கடவுளின் கண்ணிற்கு அற்பமானது என்று எதுவுமில்லை. எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் கடவுளைப் போலவே நீயும் இரு.
* துயரங்களைச் சலனமின்றிக் கடந்து செல்பவனே லட்சியவாதி. எத்தனை தோல்விகள் குறுக்கிட்டாலும் இறுதி வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருப்பான்.
* துன்பத்துக்காக வருந்த வேண்டாம். இன்பத்திற்காக ஏங்கவும் வேண்டாம். வாழ்வில் இரண்டும் மாறி மாறி வரும்.
* மூளையை பயன்படுத்தி கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். இதயத்தால் அவரை நேசியுங்கள்.

எச்சரிக்கிறார் அரவிந்தர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X