ரோஜாச்செடியில் முள்தான் அதிகம் இருக்கும். ஆனால் ரோஜாப் பூவோ சிலதான் இருக்கும். முள் அதிகம் இருப்பதால் அதை யாரும் முள்செடி என்று சொல்வதில்லை. ரோஜாச்செடி என்று தான் சொல்வர். அதுபோல ஒருவரிடம் எவ்வளவுதான் தீய குணம் இருந்தாலும், அவரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் பாருங்கள். முடிந்தால் அவரிடம் உள்ள தீயகுணத்தை ஒழிக்க முயற்சி செய்யுங்கள். ஒருநாள் அவர்களும் நல்லவர்கள் ஆவார்கள்.
நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்லதை பாருங்கள். நல்லதே நடக்கும்.