இன்றைய காலத்தில் பல மாணவர்கள் மேம்போக்காக பாடங்களை படிக்கின்றனர். இதனால் அவர்கள் படித்தது வாழ்க்கைக்கு உதவாமல் போகிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து படித்தால் எதிர்கால வாழ்வில் உயர முடியும்.
மார்ட்டீன் லுாதர் என்பவர் அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய தலைவராவார். புத்தகங்களை ஆழ்ந்து படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
'புத்தகங்களை படிக்கும்போது சோலைக்குள் செல்வதாக நான் நினைக்கிறேன். நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்த பின் முழுமையாக படிக்காமல் விட மாட்டேன். நல்ல புத்தகங்கள் எனக்கு சுவை நிறைந்த பழங்களாக தெரிகின்றன' என்கிறார்.