இன்று பலரும் பல்வேறு தீய பழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றுள் முதன்மையானது குடிப்பழக்கம்.
'இது உடலுக்கு தீங்கானது எனத் தெரிந்தும் ஏன் குடிக்கிறீர்கள்' என குடிப்பவரிடம் கேட்டால், 'தீங்கானது என்றால் ஆண்டவர் ஏன் இதை படைக்க வேண்டும்' என சிலர் சொல்வார்கள்.
'சரி.. அவர் பாவச்செயலை செய்யாதே என கூறியுள்ளாரே.. ஏன் செய்கிறீர்கள்' என்றால், பதில் சொல்ல முடியாமல் இழுத்தடிப்பார்கள்.
உலகில் நல்லதும், கெட்டதும் உள்ளன. சிகரெட், போதை பொருட்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. அப்படி இருக்கும்போது அவர் மீது பழி சுமத்தலாமா... பிரச்னைகளை தீர்க்க தெரியாதவர்களே தீய பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். பிரச்னைகளை கண்டு மயங்கவோ, கலங்கவோ செய்யாதீர்கள். எதையும் தாங்கும் இதயத்தை வளர்த்து கொள்ளுங்கள்.