இயற்கையின் நியதி
நவம்பர் 22,2021,11:21  IST

உலகில் பிறந்த அனைவரும் இன்பம், துன்பத்தை சந்தித்தே ஆக வேண்டும். இதுவே இயற்கையின் நியதி. பிறர் நம்மை விட எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பலர் நினைக்கிறோம். ஆனால் அவர்களுடன் பழகி பார்த்தால்தான் தெரியும் அவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்று.
'இறைவா.. இதை என்னால் தாங்கமுடியவில்லையே. வேறு ஏதாவது என்றாலும் சமாளித்து இருப்பேனே' என்று புலம்புவோம். இப்படி அந்தக்கஷ்டம் நீங்கி வேறு ஒரு கஷ்டம் வரும்.
மீண்டும் அதே வேண்டுதல்தான்.
உண்மையை சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்போது இறைவனுக்கு நன்றி சொல்வதில்லை. இதே துன்பம் என்றால் மட்டும் அவனிடம் வேண்டுகிறோம். எனவே இன்பம், துன்பத்தை சமமாக எண்ணி வாழுங்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X