இந்தக்காலத்தில் யாரையும் யாரும் நம்புவதில்லை. கேட்டால் 'சமுதாயம் கெட்டுவிட்டது, சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் ஏமாற்றி விடுவார்கள், உலகம் இப்போ எங்கே போகுதுன்னு தெரியல' என்று எதிர்மறையாகவே பலர் பேசுவர். இதுமாதிரியான போக்கு சரிதானா.. உண்மையில் உலகம் இப்படித்தான் உள்ளதா.. எனக்கேட்டால் இல்லை.
அடுத்தவர் மீது குறை சொல்வதற்கு முன்னால், உங்களது குறையை திருத்திக்கொள்ளுங்கள். நாம் மாறவில்லை என்றால் உலகம் எப்படி மாறும். முதலில் கூட இருப்பவர்களை நம்புங்கள். அப்போதுதான் அவர்களும் உங்களை நேசிப்பார்கள். இனியாவது குறை சொல்வதை நிறுத்துங்கள்.