கடலில் மீன் பிடிக்க வலையை வீசுவோம். அதில் நல்ல மீன்களும், கெட்ட மீன்களும் இருக்கும். அதுபோலத்தான் நம் வாழ்க்கையும். அன்றாடம் பல நபர்களை சந்திக்கிறோம். அதில் நல்லவர்கள், கோபக்காரர்கள், அப்பாவிகள் என பலர் இருப்பார்கள். யாருடன் பழக வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வு பயனுடையதாக இருக்கும்.