மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் இரண்டு நோயாளிகள் படுத்திருந்தனர். ஜன்னலுக்கு அருகில் ஒருவரும், சற்றுத்தள்ளி இன்னொருவரும் இருந்தனர். 'வெளியில் அழகிய பூங்கா இருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்' என ஜன்னல் அருகில் இருந்தவர், தான் காணும் காட்சிகளை சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் ஜன்னல்ஓர நோயாளி இறந்து போனார். எனவே தன்னை அங்கு மாற்றுமாறு அருகில் இருந்தவர் கேட்டு மாறினார். அவர் சொன்ன காட்சிகளை தானும் நேரில் காணும் பரவசத்தோடு ஜன்னலை எட்டிப்பார்த்தார். அங்கே ஒரு பெரிய சுவர் மட்டுமே இருந்தது. விசாரித்ததில், இறந்துபோன நபருக்கு கண் தெரியாது என்றும், உங்களை சந்தோஷப்படுத்தவே அப்படி கூறினார் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
இன்று பலரும் பிறர் கஷ்டப்படுவதை பார்த்து சிரிக்கிறார்கள். இது தவறான விஷயம். பிறரை சந்தோஷப்படுத்துவதில் தான் உண்மையான மகிழ்ச்சியே உள்ளது.