சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
டிசம்பர் 19,2021,14:47  IST

* ராமருக்காக இலங்கை மீது படையெடுக்க முயன்ற ஆழ்வார் குலசேகராழ்வார்.
* வளர்பிறையை சுக்கில பட்சம் என்றும், தேய்பிறையை அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் என்றும் குறிப்பிடுவர்.
* பஞ்ச சபைகளில் வெள்ளியம்பலம் எனப்படும் தலம் மதுரை.
* சிவபெருமானின் கோலங்களில் ஒன்றான பிட்சாடனரை 'பிச்சை பெருமான்' என்றும் சொல்வர்.
* சதுரகிரி மலையில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த முனிவர் அகத்தியர்
* முருகப்பெருமானுக்கு ஆறுமுகங்கள், பன்னிரண்டு கைகள். பதினெட்டு கண்கள். அவரது ஒவ்வொரு முகத்திலும் ஒரு நெற்றிக்கண் உண்டு.
* சுக்ரீவன் என்பதற்கு 'நல்ல கழுத்தைக் கொண்டவன்' என்பது பொருள்.
* வேதத்தில் லட்சுமியைப் போற்றும் பகுதி ஸ்ரீசூக்தம்.
* பெருமாள் கோயில்களில் தென்மேற்கு மூலையில் மகாலட்சுமித்தாயார் சன்னதி இருக்கும்.
* அகத்திய முனிவர் மகாலட்சுமி மீது பாடியது லட்சுமி பஞ்சகம்
* ஏழுமலையானை மணந்த பத்மாவதி அருள்புரியும் தலம் திருச்சானுார்
* நாடாளும் மன்னரின் கிரீடத்தில் இருப்பவள் மகுட லட்சுமி
* லட்சுமியின் பெயர்களில் ஒன்றான 'ஹரிணி' என்பதற்கு 'மான் போன்றவள்' என்பது பொருள்.
* அஷ்டலட்சுமிகளில் மன்னர் போஜராஜனுக்கு அருள்புரிந்தவள் தைரிய லட்சுமி
* கல்வியில் சிறக்க அருள்புரியும் விநாயகர் வித்யா கணபதி.
* விநாயக புராணத்தின் ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்
* கபில முனிவர் விநாயகர் மீது பாடிய நுால் காரியசித்தி மாலை.
* உணவில் விருப்பம் மிக்கவர் என்பதால் விநாயகரை போஜனப்பிரியர் என்பர்
* விநாயகரின் மனைவியர் சித்தி, புத்தி
* விநாயகர் வீற்றிருந்து அருளும் உலகம் ஆனந்த லோகம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X